இந்தியாவில் வேகமெடுக்கும் ‘கொரோனா’... ஒரே நாளில் 534 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்..

By Raghupati R  |  First Published Jan 5, 2022, 10:35 AM IST

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 534 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலையில் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 8-வது இடத்தில் இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 534 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,18,358 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,135 ஆக உயர்ந்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 19,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,50,18,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 534 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,82,551 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,389 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,71,830 ஆக இருந்த நிலையில்,தற்போது 2,14,004 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,47,72,08,846 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96,43,238 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,135 ஆக உயர்ந்துள்ளது.அதில் 828 பேர் குணமடைந்துள்ளனர். 

click me!