இதோ வந்துருச்சு 'கொரோனா மாத்திரை'.. வெறும் 35 ரூபாய் தானா.. அப்படியா !!

Published : Jan 05, 2022, 07:21 AM IST
இதோ வந்துருச்சு 'கொரோனா மாத்திரை'.. வெறும் 35 ரூபாய் தானா.. அப்படியா !!

சுருக்கம்

அடுத்த வாரம் முதல் இந்தியாவில் ‘கொரோனா மாத்திரை’ விற்பனைக்கு வருகிறது என்று  டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

உலகம் முழுக்க 288,476,992 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். 5,947 பேர் இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். 5,453,001 பேர் இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதேபோன்று ஒமிக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது.  இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் பயணிக்க கட்டுப்பாடு என பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான ‘மோல்னுபிரவிர்’ என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது. இந்த மாத்திரையை இந்தியாவில் “டாக்டர் ரெட்டிஸ்”  நிறுவனம் தயாரித்து வழங்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை ரூ.1,400 ஆக இருக்கும். இந்த மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உற்பத்தி செய்து, வினியோகம் செய்யும். அடுத்த வாரம் முதல் இந்தியா முழுவதுமுள்ள மருந்து கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?