அடுத்த 25 ஆண்டுகள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்கள் பாபா ஜோராவர் சிங், பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26ஆம் தேதி 'வீரப்புதல்வர்கள் தினம்’ அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் வீரப்புதல்வர்கள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'வீரப் புதல்வர்கள் தினம்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். குழந்தைகள் நிகழ்த்திய மூன்று தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், டெல்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
undefined
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வீரப் புதல்வர்களின் அழியாத தியாகங்களை நாடு நினைவு கூர்ந்து வருவதாகவும், அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவதாகவும், வீரப் புதல்வர்கள் தினத்தில் புதிய அத்தியாயம் விடுதலைப் பெருவிழாவின் அமிர்தகாலத்தில் இந்தியாவுக்காக விரிவடைவதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இதே நாளில் கொண்டாடப்பட்ட முதலாவது வீரப் புதல்வர்கள் தினக் கொண்டாட்டங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். அப்போது வீரப் புதல்வர்களின் வீரக் கதைகள் முழு நாட்டையும் உத்வேகப்படுத்தின. "வீரப் புதல்வர்கள் தினம் என்பது நாட்டின் தன்மையைப் பாதுகாப்பிற்காக ஒருபோதும் வீழாத மனப்பான்மையின் அடையாளமாகும்" என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
"வீரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, வயது ஒரு பொருட்டல்ல என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது" என்று அவர் கூறினார். சீக்கிய குருக்களின் பாரம்பரியத்தின் கொண்டாட்டம் என்று கூறிய பிரதமர், குரு கோவிந்த் சிங் மற்றும் அவரது நான்கு வீரப்புதல்வர்களின் துணிச்சல், லட்சியங்கள் இன்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் துணிச்சலை அளிப்பதாக கூறினார். பாபா மோதி ராம் மெஹ்ராவின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள், திவான் தோடர்மாலின் பக்தி ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர், " வீரப் புதல்வர்கள் தினம் என்பது ஈடுஇணையற்ற துணிச்சல்மிக்க இதயங்களைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஒரு நாட்டின் மரியாதையாகும்" என்று கூறினார். குருக்கள் மீதான இந்த உண்மையான பக்தி, நாட்டின் மீதான பக்தியை வலுப்படுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கிரீஸ் ஆகிய நாடுகள் வீரப் புதல்வர்கள் தினம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததால், வீரப் புதல்வர்கள் தினம் இப்போது சர்வதேச அளவில் கொண்டாடப்படுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். சம்கவுர், சிர்ஹிந்த் போர்களின் ஒப்பிடமுடியாத வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த வரலாற்றை மறக்க முடியாது என்று கூறினார். கொடுமையையும் சர்வாதிகாரத்தையும் இந்தியர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் எதிர்கொண்டார்கள் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
வாய்ப்புகளை அளிப்பதில் உலக நாடுகள் இந்தியாவை முன்னணி நாடாகக் காண்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரம், அறிவியல், ஆராய்ச்சி, விளையாட்டு, ராஜ்ஜீயம் ஆகியவற்றின் உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். அதனால்தான், " இதுதான் தருணம், இதுவே சரியான தருணம்" என்று செங்கோட்டையில் இருந்து தாம் விடுத்த அறைகூவலை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். " இது இந்தியாவின் தருணம், அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும்" என்று அவர் மேலும் கூறினார். ஒரு கணத்தைக் கூட வீணாக்காமல் ஐந்து உறுதிமொழிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா ஒரு காலகட்டத்தை கடந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். விடுதலைப் பெருவிழாவின் இந்த அமிர்த காலத்தில், இந்தியாவின் பொற்காலத்தைத் தீர்மானிக்கும் பல காரணிகள் ஒன்றிணைந்துள்ளன என்று திரு. மோடி கூறினார். இந்தியாவின் இளைஞர் சக்தியைக் குறிப்பிட்ட அவர், சுதந்திரப் போராட்ட காலத்தை விட இன்று நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் தேவையில்லை: 1977 தேர்தலை சுட்டிக்காட்டிய சரத் பவார்!
மேலும் தற்போதைய தலைமுறை இளைஞர்களால் நாட்டைக் கற்பனை செய்ய முடியாத உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "வரவிருக்கும் 25 ஆண்டுகள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றன" என்று அவர் கூறினார்.
"வரவிருக்கும் 25 ஆண்டுகள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றன" என்று கூறினார். இந்திய இளைஞர்கள், எந்தப் பிராந்தியத்தில் அல்லது சமூகத்தில் பிறந்தாலும், எல்லையற்ற கனவுகளைக் கொண்டுள்ளனர். இந்தக் கனவுகளை நிறைவேற்ற, அரசிடம் ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை உள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை, 10 ஆயிரம் அடல் ஆய்வகங்கள், துடிப்பான புத்தொழில் கலாச்சாரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அவர் இதை விவரித்தார். முத்ரா கடன் திட்டத்தின் மூலம் இளைஞர்கள், எஸ்.சி/எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 8 கோடி புதிய தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் விரும்பிய முடிவுகளை அடைவதற்கு இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். உடற் பயிற்சி, டிஜிட்டல் டிடாக்ஸ், மன ஆரோக்கியம், போதுமான தூக்கம், ஸ்ரீஅன்னா அல்லது சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது போன்ற சவால்களைக் குறிப்பிட்டு அவர் தங்களுக்கான சில அடிப்படை விதிகளை உருவாக்கி அவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.