சபரிமலை யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் டிசம்பர் 25 வரை மொத்தம் 31,43,163 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தள்ளனர்.
சபரிமலை கோவிலின் வருவாய் செவ்வாய்க்கிழமை ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வருடம் தோறும் இரண்டு மாத காலம் நீடிக்கும் சபரிமலை யாத்திரை சீசன் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 25ம் தேதி வரையான 39 நாட்களில் கோயிலுக்கு ரூ.204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
undefined
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், யாத்ரீகர்கள் காணிக்கையாக செலுத்திய நாணயங்கள் இன்னும் எண்ணப்பட்டு வருவதாகவும், எண்ணும் பணி முடிந்ததும் மொத்த வருவாய் உயரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
மொத்த வருவாயான 204.30 கோடி ரூபாயில், 63.89 கோடி ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன. 96.32 கோடி ரூபாய் அரவண பிரசாதம் விற்பனை மூலம் கிடைத்ததாகவும், அப்பம் விற்பனை மூலம் ரூ.12.38 கோடி வருவாய் ஈட்டியதாகவும் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் டிசம்பர் 25 வரை மொத்தம் 31,43,163 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தள்ளனர்.
பக்தர்களுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்திருப்பதாகக் கூறிய தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், அன்னதான மண்டலம் மூலம் டிசம்பர் 25 வரை 7,25,049 பேருக்கு இலவச உணவை வழங்கியுள்ளதாக் கூறினார்.
மண்டல பூஜை முடிந்து சபரிமலை புதன்கிழமை இரவு 11 மணிக்கு மூடப்பட்டு, மகரவிளக்கு சடங்குகளுக்காக டிசம்பர் 30-ஆம் தேதி திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் என்றும் பிரசாந்த் கூறியுள்ளார்.