அயோத்திக்கு கடவுளின் அழைப்பு யாருக்கு? சூடுபிடிக்கும் ராமர் கோயில் திறப்பு விழா சர்ச்சை

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது ஒரு பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 


இன்னும் நான்கு மாதங்களுக்குள் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனவரி 22ஆம் தேதி நிகழவுள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. மதத் தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர்களுக்கு திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பிருந்தா காரத், மத நிகழ்ச்சியை அரசியலுடன் தொடர்புபடுத்துவதால் தங்கள் கட்சி விழாவில் பங்கேற்காது என்று கூறியுள்ளார்.

Latest Videos

"நாங்கள் மத நம்பிக்கைகளை மதிக்கிறோம்... ஆனால் அவர்கள் மதத்தை அரசியலுடன் இணைக்கிறார்கள். மதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது சரியல்ல" என்று பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது ஒரு பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், பிருந்தா காரத் கருத்துக்குப் பதில் சொல்லி இருக்கும் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, "அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், ராமரின் அழைப்பு யாருக்குக் கிடைத்திருக்கிறதோ அவர்கள் மட்டுமே வருவார்கள்" 

ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பை பிற எதிர்க்கட்சியினரும் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "என் இதயத்தில் ராமர் இருக்கிறார். எனவே, இந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு இடதுசாரி கட்சியான சிபிஐயும் ராமர் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியினரின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடுமையாக பதில் அளித்துள்ளார். "பாஜகவை கேலி செய்தவர்களே... உங்களுக்கு தைரியம் இருந்தால், அயோத்திக்கு வாருங்கள், நாங்கள் உங்களுக்கு கோயிலைக் காட்டுகிறோம்" என்று தெரிவித்துளாளர்.

காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது பற்றித் தெரியவில்லை.

click me!