ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், புதிய தொற்று தொடர்பான ஆராய்ச்சிகளும், தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. மேலும், ஆங்காங்கே திடீரென கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து பின்னர் கட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளது.
undefined
அந்த வகையில், கோவிட்19இல் துணை மாறுபாடான JN.1 தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தென் கிழக்கு நாடுகளில் வேகமாக பரவி வந்த இந்த மாறுபாடு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்த பல்வேறு அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 51 வயது பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அண்மைக்காலமாக பரவு வரும் கொரோனா தொற்றுக்கு அம்மாநிலத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 24ஆம் தேதியன்று அந்தப் பெண் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். சரஸ் மாறுபாட்டை சோதிக்க விஜயவாடாவில் உள்ள ஜீனோம் சீக்வென்சிங் ஆய்வகத்திற்கு அவரது மாதிரிகள் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக, அந்த முடிவுகள் வரும் முன்பே அப்பெண் இறந்து விட்டார்.
திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒராண்டு ஆகிறது: அண்ணாமலை காட்டம்!
ஜார்ஜ் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் குமார் கூறுகையில், “அப்பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3:00 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவரது மரணம் அதனால் ஏற்பட்டது என்று உறுதியாக முடிவு செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.” என்றார்.
“ஏற்கனவே அப்பெண் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததார். சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் முதலில் மார்பக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.” எனவும் அவர் கூறினார்.