முற்றும் மோதல்.! Siddaramaiah-வை நீக்கி முதல்வராகிறாரா Dk Shivakumar.?

Published : May 29, 2025, 10:58 PM ISTUpdated : May 29, 2025, 11:07 PM IST
DK Shivakumar  Siddaramaiah

சுருக்கம்

கர்நாடகாவில் துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சரான சிவகுமாருக்குத் தெரியாமல் அவரது துறையின் கீழ் உள்ள 5 மூத்த பொறியாளர்களை மாற்றியதுதான் இந்த மோதலுக்குக் காரணம். 

Siddaramaiah Power struggle between D.K. Shivakumar : கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோரிடையே க‌டும் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை வரை சென்ற பேச்சுவார்த்தை முடிவில் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் பதவி டி.கே.சிவகுமாருக்கும் வழங்கப்பட்டது. இதனை மனம் இல்லாமல் டிகே சிவக்குமார் ஏற்றுக்கொண்டாலும். இருவருக்கும் இடையே தொடர்ந்து மறைமுகமாக மோதல் நீடித்து வருகிறது. முதல்வர் பதவியை மையமாகக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

முதல்வர் பதவிக்கா மோதிக்கொள்ளும் டிகே சிவக்குமார்- சித்தராமையா

டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் துணை முதல்வர் பதவியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்கள். இது மட்டுமில்லாமல் இரு தரப்பிற்கும் இடையே பட்ஜெட் ஒதுக்கீடுகள், அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களுக்கான நியமனங்கள் குறித்தும் இரு தரப்பிற்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடமாற்றம்- சீறிய டிகே சிவக்குமார்

இந்த நிலையில்  துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே நிலவி வந்த மோதல் மீண்டும் வெளிப்பட்டது.நீர்வளத்துறை அமைச்சராக உள்ள சிவக்குமார் உள்ள நிலையில் அவருக்கே தெரியாமல் அவர் துறையின் கீழ் உள்ள 5 மூத்த பொறியாளர்களை மாற்றிய உத்தரவு தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் மே 9 அன்று நீர்வளத் துறையின் வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்டனர். இதனையடுத்து மே 13 தேதி துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் தலைமைசெயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது எனது ஒப்புதல் இல்லாமல் தனது துறை சார்ந்த இடமாற்றங்களோ அல்லது நியமனங்களோ இருக்க கூடாது என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் இது போன்ற இடமாற்றம் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இது போன்ற நடவடிக்கைகளால்  பொதுப்பணித்துறையில் பணியாற்ற அதிகாரிகள் தயங்குவதாகவும் தெரிவித்த அவர், இனி எனது அனுமதி இல்லாமல்  நீர்பாசன துறையில் டிரான்ஸ்பர்கள் செய்ய கூடாது என தெரிவித்திருந்தார்.  துணை முதலமைச்சரின் புகாருக்கு முதலமைச்சர் எந்தவித ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை. இருந்த போதும் இரு தரப்பிற்கும் இடையேயான மோதலை தூண்டியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

முதல்வர் பதவியை கைப்பற்றுவாரா டி கே சிவக்குமார்

இந்த நிலையில் இடமாற்றங்கள் திரும்பப் பெறப்படுமா அல்லது மீண்டும் மோதல் உச்சத்தை பெறுமா.? என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும். அதே நேரம் 2023ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வர் பதவி என முடிவு செய்யப்படதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போதே முதல்வர் பதவியை பிடிக்க டி கே சிவக்குமார் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!