
அடுத்த ஆண்டு குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதையொட்டிதான், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்தே ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்து மக்களிடமும் மத்திய அரசு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஒரே தேசம் ஒரே வரி தட்டம் தற்போது ஒரே தேசம் பல வரி என்ற முயைல் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பேசிய அவர், புதுவையில் டெங்கு பாதிப்பு இல்லை என்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர்தான் டெங்கு பாதிப்பால் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்தபோதும், பெட்ரோல் விலை குறைக்கவில்லை. பெட்ரோல் - டீசல் விலை குறைக்காமல் இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் எனவும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.