லாபம் சம்பாதிக்க நினைக்காமல் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவேண்டும்..! ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

Asianet News Tamil  
Published : Oct 07, 2017, 10:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
லாபம் சம்பாதிக்க நினைக்காமல் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவேண்டும்..! ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

சுருக்கம்

rahul advice to modi

மத்திய அரசு கொள்ளை லாபம் அடைவதைத் தடுக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

‘ஒரு நாடு, 7 வரிகள்’ என்பதை சரி செய்வதற்கான நேரம் இது தான். வரி செலுத்துபவர்கள் ஏராளமான படிவங்களை நிரப்புகிறார்கள், வருமான வரித் துறையினருக்கு கொடூரமான அதிகாரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். வரி செலுத்துவதை எளிமையாக்கி, சிறப்பாக மாற்ற வேண்டும்.

நாட்டின் பொருளாதார சரிவுகளை மோடி கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பலன் அடைவதை விடுத்து, ஜி.எஸ்.டி குழப்பத்தால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

இதற்கு முதலில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சாமானிய மக்களை வறுத்தி, அரசு ரூ.2.73 லட்சம் கோடி கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள சிறு, குறு வர்த்தகர்களுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்து, அமைப்பு சாரா துறையில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் இளைஞர்கள் வேலை கேட்டு காத்திருக்கிறார்கள், ஆனால், 450 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. நாட்டில் புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். வேலையில்லாத இளைஞர்கள் மூலம் மாதத்துக்கு 10 லட்சம் பேர் கொண்ட ஒரு ராணுவத்தை உருவாக்கலாம்.

இளைஞர்கள், விவசாயிகள், சிறு வர்த்தகர்கள் அனைவரும் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள், இது நாட்டுக்கு நல்லது அல்ல. ஆபத்தானது.

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு, ஜி.எஸ்.டி. வரி மூலம் நாட்டில் உள்ள சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கும், தொழில் முனைவர்களுக்கும் உதவுவதற்கு பதிலாக அவர்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், அந்த வர்த்தகர்களை அழித்துவிடும். அந்த தொழில்களையும், வர்த்தகர்களையும் மதிக்காத வரை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு சிறு தொழில்களையும், அமைப்பு சாரா தொழில்களுக்கும் அரசு  உதவ வேண்டும்.

ஆனால், மத்திய அரசோ தனது சக்தி முழுவதையும் பெரிய நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களின் நலனுக்கும் செலவு செய்கிறது. சிறு, நடுத்தர தொழில்பிரிவினரை நிராகரிக்கிறது.

நாட்டில் அதிகமாக வேலைவாய்ப்பு அளிக்கும் 2-வது மிகப்பெரிய துறை ஜவுளித்துறையாகும். ஆனால், ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதால், அந்த துறையின் கட்டமைப்பே சிதைந்துவிட்டது. 

சிறு வியாபாரிகள், சிறு, குறு நிறுவனங்கள், சிறு தொழில் செய்வோர் வேதனையில் சிக்கி வருகின்றனர். ஆனால் பெரு முதலாளிகள், பணக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்