முக்கிய அறிவிப்பு மக்களே... வருமான வரி தாக்கல் செய்ய.. அவகாசம் நீட்டிப்பு... மத்திய அரசு அதிரடி !!

By Raghupati RFirst Published Jan 12, 2022, 6:52 AM IST
Highlights

2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி தாக்கலை செய்ய ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31ம் தேதி கடைசி நாளாக இருக்கும். ஆனால்,  நடப்பு ஆண்டில் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி வந்த கொரோனா, வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனையால், பலரும் தங்களது வருமான வரி தாக்கலை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் போனது.

இதன் காரணமாக செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 என்ற இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த அவகாசம் முடிவடைய இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், இதுவரையில் புதிய வருமான வரி தளத்தில் இ பைலிங் செய்தோரின் எண்ணிக்கையானது 4.67 கோடி பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா, ஆன்லைன் தாக்கலில் தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணங்கள் வரித் தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்க முக்கிய காரணங்களாக இருந்தது என்கிறார்கள்.அவகாசமும் போதாது என வரிச் செலுத்துவோர் கோரிக்கை வைத்ததால் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

On consideration of difficulties reported by taxpayers/stakeholders due to Covid & in e-filing of Audit reports for AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued. pic.twitter.com/2Ggata8Bq3

— Income Tax India (@IncomeTaxIndia)

இதுகுறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கார்பரேட் நிறுவனங்களின் வரித் தாக்கலுக்கான கால அவகாசம் மார்ச் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை வருமான வரித் துறை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.

click me!