
கட்டணம் அழைப்பு குறைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. இது தொடர்பாக செல்போன் நிறுவனங்கள், நீதிமன்றம் செல்லப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஒரு செல்போன் சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர், மற்றொரு செல்போன் நிறுவன வாடிக்கையாளரை அழைக்கும்போது அந்த நிறுவனத்துக்கு முதல் நிறுவனம் தர வேண்டிய கட்டணம் அழைப்பு குறைத்து டிராய் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
14 பைசா என்ற அளவில் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் அழைப்பு 6 பைகா என்ற அளவுக்கு டிராய் குறைத்து அறிவித்தது. அது மட்டுமல்லாது வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் டிராய் கூறியது. மேலும் 2020 இல் இருந்து முழுவதும் இணைப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் டிராய் அறிவித்தது.
இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராயின் இந்த அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்டணம் அழைப்பு குறைக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.