
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பிறமாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு இரண்டடுக்கு பேருந்துகளை இயக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கார்கள் மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகிறது. போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் அதற்காக கார்கள் பயன்படுத்துவோரை தடுக்க முடியாது என்பதால் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், இரண்டடுக்கு பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை தடுக்க தற்காலிக தீர்வாக இருக்கும். இரண்டடுக்கு பேருந்துகள் முழுமையான குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். சாதாரண பேருந்துகள் பயன்படுத்தும் பரப்பளவையே இந்த பேருந்துகளும் எடுத்துக்கொள்ளும். ஆனால் அதேநேரத்தில் இரண்டடுக்கு பேருந்துகளில் இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்கலாம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் குறையும். வருமானமும் இரட்டிப்பாகும்.
இரண்டடுக்கு பேருந்துகளை இயக்க டெல்லி-ஆக்ரா, வதோதரா-மும்பை, லக்னோ-கோரக்பூர், பெங்களூரு-மங்களூர் உள்ளிட்ட 75 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை சாலை போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.