
தென்னக ரயில் நிலையங்களில் கொள்ளை சம்பவங்களைத் தடுக்க ரூ.60 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், செய்தியாளர்களிடம் பேசிய வசிஷ்ட ஜோரி, தென்னக ரயில் நிலையங்களில் ரூ.60 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மூன்றில் இருந்து நான்கு மாதங்களில் முடிக்கப்படும் என்று கூறினார்.
ரயில் நிலையங்களில் கொள்ளை உள்ளிட்டவைகளைத் தடுக்க ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ரோந்து அதிகரிக்கப்படும் என்றார்.
ரயில் பயணிகள் 192 எண்ணிற்கு தொடர்பு கொண்டால், அரை மணி நேரத்தில் ஊழியர்கள் அவர்களின் பிரச்சனை தீர்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை 192 எண்ணிற்கு 500 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும் வசிஷ்ட ஜோரி கூறினார்.