திடீரென்று வந்த வெள்ளம்.. நடு ஆற்றில் சிக்கிய கார்.. மரத்தில் ஏறி தப்பித்த தம்பதியினர்.. திக் திக் நிமிடங்கள்.

By Thanalakshmi V  |  First Published Oct 6, 2022, 6:10 PM IST

ஆந்திராவில் தசரா திருவிழா முடிந்து ஊருக்கு திரும்பிய தம்பதியினரின் கார் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் நகரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் எல்லை பகுதியான தெலுங்கானாவில் விக்கிரபாத் மாவட்டத்தில் கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டது.  ஓடை கடக்க முயன்ற போது, திடீரென்று வந்த வெள்ளத்தால் கார் அடித்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:பரபரப்பு.. பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது..

நல்வாய்ப்பாக காரில் இருந்த தம்பதியினர் உடனடியாக வெளியேறி, அருகில் இருந்த மரத்தில் ஏறி உயிர் பிழைத்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் கயிறு மூலம் அவர்களை மீட்டனர்.இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தசரா திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த தம்பதியினர் இன்று காலை திருவிழாவை முடித்து விட்டு ஊர் திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.நகரம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க:9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் 1000... மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
 
click me!