பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களுக்கு ஒமைக்ரான் வராது.. ? ஆனால் இந்த வைரஸால் பாதிப்பு.. ஆய்வில் அதிர்ச்சி..

By Thanalakshmi V  |  First Published Apr 8, 2022, 4:13 PM IST

டெல்டா வைரஸ் தொற்று பாதிப்பினால் குணமடைபவர்களை விட மூன்று நாள்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஒமைக்ரானில் இருந்து குணமடைவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
 


டெல்டா வைரஸ் தொற்று பாதிப்பினால் குணமடைபவர்களை விட மூன்று நாள்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஒமைக்ரானில் இருந்து குணமடைவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா பெருந்தொற்று கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தை ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான், டெல்மிக்ரான் எனும் பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 4 டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவு தன்மையை கொண்டதாக இருந்தது. ஆனால் முன்னால் கண்டறியப்பட்ட உருமாற்றங்களை விட குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஒமைக்ரான் திரிபு கொரொனா வைரஸின் இறுதி உருமாற்றம் என்றும் இதோடு கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு எக்ஸ்இ வகை வைரஸ் சீனா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

லண்டன் கிங்ஸ் கல்லூரி குழு நடத்திய ஆய்வில், டெல்டா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுவர்களுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகளின் காலம் கணிசமாக குறைவாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாக இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.மேலும் டெல்டா வைரஸ் பரவல் வேகத்தை ஓப்பிடும் போது  ஒமைக்ரான் வைரஸ் தொற்றிகளினால் ஏற்படும் அறிகுறிகளின் கால அளவை குறைப்பதில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி உதவுகிறது என்று கிங்ஸின் இரட்டை ஆராய்ச்சி மற்றும் மரபணு தொற்றுநோயியல் துறையை சேர்ந்த டாக்டர் கிறிஸ்டினா மென்னி கூறினார்.

டெல்டா வைரஸின் பாதிப்பை விட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் சேர்பவர்களின் விகிதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், டெல்டா வைரஸுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறுப்பட்ட மருத்துவ அறிகுறிகள் கொண்டு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அங்கு முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

click me!