ஏப்.10 முதல் தனியார் மையத்திலும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்... அறிவித்தது மத்திய அரசு!!

Published : Apr 08, 2022, 03:48 PM IST
ஏப்.10 முதல் தனியார் மையத்திலும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்... அறிவித்தது மத்திய அரசு!!

சுருக்கம்

ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பரவி மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கியது. பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளால் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே அஸ்திரம் தடுப்பூசி மட்டுமே என்ற நிலை இருப்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிகளை தயார் செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்திக்கொண்ட நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அங்கு முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!
120 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்! ரூ.2,500 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!