
சன்யாசி கிளப்பிய சர்ச்சை :
உத்தரப் பிரதேசத்தில் சன்யாசி ஒருவர் பேசியுள்ள பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூரில் உள்ள கைராபாத்தில் உள்ள சேஷே வாலி மஸ்ஜித் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவுக்காக ஜீப்பில் ஒலிபெருக்கி மூலம் சன்யாசி ஒருவர் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட தற்போது வைரலாகி வருகிறது.
பேசிய சன்யாசி, இஸ்லாமியர்களை குறித்து அவதூறு பரப்பியுள்ளார். ஏப்ரல் 2ம் தேதி சர்ச்சைக்குரிய பேச்சு பேசப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களை பகிரங்கமாக பலாத்காரம் செய்ய வேண்டும் என சன்யாசி பேசியுள்ள பேச்சைக்கேட்டு அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர், 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்டனர்.
வைரல் வீடியோ :
இந்த இரண்டு நிமிட பேச்சு வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அதில், ‘உங்களில் யாராவது தேவையில்லாமல் ஒரு இந்து பெண்ணை அணுகினால், நான் இஸ்லாமிய பெண்களை பகிரங்கமாக கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வேன்’ என்று சன்யாசி கூறினார். காவி உடை அணிந்த சன்யாசி, வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியபோது, தன்னை கொல்ல இஸ்லாமியர்கள் சதி செய்ததாகவும், இதற்காக 28 லட்ச ரூபாய் வசூலித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கைராபாத் தலைநகர் லக்னோவில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில், பேசி 5 நாட்கள் ஆகியும், போலீசார் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.