கருத்து கணிப்பைத் தவிடுபொடியாக்கிய பாஜக...! தொண்டர்கள் உற்சாகம்

First Published May 15, 2018, 11:23 AM IST
Highlights
The BJP which has lost the opinion poll ...!


கர்நாடகவில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரையில்லாத வகையில் மிக அதிக அளவு வாக்குப்பதிவானது. 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 120 இடங்களில் பாஜக முன்னிலை உள்ளது. காங்கிரஸ் 60 இடங்க்ளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களை பொய்யாக்கி, காங்கிரஸ் மொத்தமாக தோல்வி அடைந்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க உள்ளது.

தற்போது பாஜகவினர் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் முக்கிய பகுதியாக இன்று பாஜக கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் எடியூரப்பா பதவியேற்பு விழாவிக்கான அறிவிப்பு வெளியாகும். தென் இந்தியாவில் மட்டும் பாஜக வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருந்தபோது, கர்நாடகாடிவல் பாஜக கால்பதித்து பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

click me!