Five Star Hotel: ஏர் இந்தியாவுக்கு அடுத்து விற்பனைக்கு வரப்போகும் மிகப்பெரிய ஓட்டல்..? வெளியான தகவல்..

Published : Feb 02, 2022, 06:26 PM ISTUpdated : Feb 02, 2022, 06:28 PM IST
Five Star Hotel: ஏர் இந்தியாவுக்கு அடுத்து விற்பனைக்கு வரப்போகும் மிகப்பெரிய ஓட்டல்..? வெளியான தகவல்..

சுருக்கம்

தில்லியில் இருக்கும் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியான தி அஷோக் ஓட்டலை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தலைநகர் தில்லியின் பிரபலமான மற்றும் இதயத் துடிப்பாக விளங்கும் லூட்யென்ஸ் பகுதியில் அதுவும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் தான் இந்த தி அஷோக் ஓட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் மத்திய சுற்றுலா அமைச்சகம், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையினர் 25 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த மிகப்பெரிய சொத்தை சுமார் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அமைச்சரவையிடம் ஓப்புதல் பெறுவதற்கான முயற்சியை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குத்தைக்கு வரவிருப்பதாக கூறப்படும் இந்த ஒட்டுமொத்த சொத்தில், சுமார் 200 விடுதி அறைகள், ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள்,வணிக வளாகம் , தனித்துவமிக்க மிகபெரிய உணவகம், கேளிக்கை விடுதி மற்றும் சுகாதாரக்கூடம் ஆகியவை அடங்கும்.தி அஷோக் ஓட்டலை குத்தகைக்கு விற்பனை செய்வதன் மூலம், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்து அமைச்சக்கத்தில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை பெற்று பிறகு பூர்வாங்கப் பணிகள் தொடங்கி இந்த ஆண்டுக்குள் தி அஷோக் ஒட்டல் குத்தகைக்கு விடப்படும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஓட்டலை குத்தகைக்கு எடுக்கப்போகும் தொழிலபதிர்களின் பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை புதுதில்லியில் முகேஷ் அம்பானிக்கு என்று சொந்தமாக எந்த நட்சத்திர ஓட்டலும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கிளாரிட்ஜ் ஓட்டலிருந்து நந்தாஸ் மட்டும் பிரித்து வாங்கி கொள்ள எடுத்து முயற்சிகள் எதும் பலனளிக்கவில்லை.

அதன்பிறகு, மிக பெரிய அந்தஸ்துக் கொண்ட கிழக்கு இந்திய ஓட்டல்ஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தி வந்த ஓபெராயில் முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். தற்போது, அவர் மனைவி நீதா அதன் இயக்குனராக உள்ளார். ஆனால் ஓட்டலின் மொத்த நிர்வாகமும் பிரித்விராஜ் சிங் பிகி ஓபெராய் வசமே உள்ளதாக தெரிகிறது. இதனால்,ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்பும் தங்களிடம் இருக்கும் வகையில் ஒரு நட்சத்திர ஓட்டலை வாங்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுருப்பதாகவும் அதற்கு தி அஷோக் ஓட்டல் நல்வாய்ப்பாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வாஜ்பாயி தலைமையில் மத்திய அரசு இருந்தபோதே,  அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா இந்த ஓட்டலை கைப்பற்ற திட்டமிட்டு இருந்ததாகவும் அப்போது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஜக்மோகன் , அதற்கு அனுமதி தராமல், ஓட்டலை விற்பனை செய்ய மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் உள்ளன.மத்திய அரசுக்கு லாபமீட்டித் தரும் எந்த நிறுவனத்தை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு ஜக்மோகன் கூறிவிட்டார். அதே தொடர்ந்து, தி அஷோக் ஓட்டல் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க உத்தரவிட்டடதைத் தொடர்ந்து, அந்த ஓட்டல் தனது வருவாயை அதிகரித்துக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!