சிறார்களுக்கு 2வது டோஸ் செலுத்துவதை விரைவுபடுத்துங்கள்... மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

Published : Feb 02, 2022, 03:58 PM IST
சிறார்களுக்கு 2வது டோஸ் செலுத்துவதை விரைவுபடுத்துங்கள்... மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

சுருக்கம்

சிறார்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சிறார்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 லட்சத்து 67 ஆயிரத்து 59 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 2 லட்சத்து 9 ஆயிரத்து 918ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 54 ஆயிரத்து 76 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 லட்சத்து 43 ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் 28 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்துவதை  தினமும் பதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிறார்களுக்கான  இரண்டாவது டோஸுக்கு உரிய பயனாளிகள் யார் என்பதை பற்றிய தரவுகளை கோவின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய  மாநிலத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!