மகிழ்ச்சி செய்தி !! இந்தியாவில் குறையும் 'கொரோனா' பாதிப்பு.. மத்திய அரசு தகவல்..

By Raghupati R  |  First Published Feb 1, 2022, 12:04 PM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. கொரோனா 3வது அலையும் தொடங்கியது. 

ஜனவரி முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த பாதிப்பு அடுத்த நாட்களில் லட்சக்கணக்கை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வருகிறது.

Latest Videos

undefined

கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்து மக்களை சற்று நிம்மதி அடையச் செய்துள்ளது.  கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு, 'இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,192- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 076- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 43 ஆயிரத்து 059- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 11.69-சதவிகிதமாக இருக்கிறது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 11.69- சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 166.68 கோடியாக உயர்ந்து உள்ளது.

click me!