மணிப்பூர் முதல்வர் மீது தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

 
Published : Oct 25, 2016, 05:15 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
மணிப்பூர் முதல்வர் மீது தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு-  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சுருக்கம்

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் முதலமைச்சராக ஒக்ரம் ஐபோபி சிங் இருந்து வருகிறார். 

செயல்திட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஒக்ரம் ஐபோபி உக்ரூல் ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், ஒக்ரம் ஐபோபியை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஒக்ரம் ஐபோபியை, பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்ட வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!