
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகறை மட்டும்தான் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி தள்ளுபடி செய்தார்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். விசாரணையின் முடிவில் மாறன் சகோதரர்களின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் உள்ளிட்டோர் சென்ற வாரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.