குஜராத் கடற்கரை பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலா?... 26 பேர் கைது…

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
குஜராத் கடற்கரை பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலா?... 26 பேர் கைது…

சுருக்கம்

குஜராத் கடற்கரை பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலா?... 26 பேர் கைது…

குஜராத் கடற்கரைக்‍கு அப்பால் அரபிக்‍ கடலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 26 பேருடன் வந்த 5 மீன்பிடிப் படகுகளை கடலோர காவல் படையினர் கைப்பற்றி, அவற்றில் இருந்தவர்களை கைது செய்துள்ளனர்.

இந்திய கடற்படைக்‍கு சொந்தமான ரோந்துக்‍ கப்பல் ஒன்று அரபிக்‍கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இந்திய கடற்பகுதிக்‍குள் அத்துமீறி புகுந்த 5 மீன்பிடிப் படகுகளை மறித்து நிறுத்தினர்.

படகுகளில் சோதனையிட்டபோது, அவற்றில் 26 பேர் இருப்பது கண்டுபிடிக்‍கப்பட்டது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்கள் என்று கூறப்பட்டபோதிலும், தீவிரவாதிகள் மீனவர்கள் போர்வையில் ஊடுருவியிருக்‍கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ஜக்‍காவோ என்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மர்மப்படகில் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பை நகரில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்‍கிச் சூடு நடத்தியதில் 160-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்‍கது.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நாங்கதான்..! உலகத்துக்கே நாட்டாமையாக கொக்கரிக்கும் சீனா..!
இன்றே கடைசி நாள்..! மக்களே இந்தப்பணிகளை முடிக்கவில்லை என்றால் சேதாரம் நிச்சயம்..!