வரதட்சணையாக பழைய பர்னீச்சரைக் கொடுத்ததாகக் கூறி கல்யாணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணையாக பழைய பர்னீச்ச்ரைக் கொடுத்தாகக் கூறி திருமணத்தையே நிறுத்திய மணமகன் வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் மணமகன் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற இருந்த திருமணத்திற்கு வரவில்லை. இதனால் மணப்பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணமகன் வீட்டிற்குச் சென்று அழைத்தபோது மணமகனின் தந்தை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் மணமகளின் தந்தை தெரிவிக்கிறார்.
Cooker Blast: அரசியல் கட்சியினர் பரிசாகக் கொடுத்த குக்கர் வெடித்து பெண் காயம்
மேலும், “தாங்கள் கேட்ட பொருட்களை தரவில்லை. பர்னீச்சர்களும் பழையவையாக உள்ளன என்று கூறி அவர்கள் திருமணத்துக்கு வர மறுத்துவிட்டனர். நாங்கள் அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டோம். உறவினர்கள், விருந்தினர்கள் அனைவரையும் அழைத்திருக்கிறேன். ஆனால் மணமகன் திருமணத்திற்கு வரவில்லை” என்கிறார்.
மணமகனின் குடும்பத்தினர் வரதட்சணையாக பர்னீச்சர்கள் உள்ளிட்ட பல பொருட்களை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் புதியவையாக இல்லாமல் ஏற்கெனவே பயன்படுத்திய பொருட்கள் மணமகளின் குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மணமகனின் குடும்பத்தினர் அவற்றை ஏற்க மறுத்து, திருமணத்துக்கு வராமல் இருந்துவிட்டனர்.
மணப்பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
எல்லா இடத்திலும் உன்னை தேடுறேன் மா... தாய் ஸ்ரீதேவி குறித்து பதிவிட்டு கலங்கிய ஜான்வி கபூர்