பீகார் முதல்வரை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்… துணை முதல்வரையும் சந்தித்து ஆலோசனை!!

By Narendran S  |  First Published Aug 31, 2022, 4:54 PM IST

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் மகா கூட்டணியின் மூத்த தலைவர்களை பாட்னாவில் சந்தித்தார். 


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் மகா கூட்டணியின் மூத்த தலைவர்களை பாட்னாவில் சந்தித்தார். மாநிலத்தில் மகா கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையே நிலவும் அரசியல் மந்தநிலைக்கு மத்தியில் நிதிஷ் மற்றும் தேஜஸ்வி உடனான ராவின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் ‘விர்ச்சுவல் பள்ளிக்கூடம்’: கெஜ்ரிவால் தொடங்கிய பள்ளியின் அம்சங்கள் என்ன?

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய சந்திரசேகர் ராவ், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார். சந்திரசேகர் ராவ், தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாதவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வருகிறார். இரு தேசிய கட்சிகளும் தேசத்தை வளர்ப்பதில் தோல்வியடைந்தன என்பதே அவரின் கருத்தாக உள்ளது. 

இதையும் படிங்க: பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் இவரா? ஜேபி நட்டா பதவிக்காலம் முடிகிறது

முன்னதாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி, தேஜஸ்வி மற்றும் மூன்று ஆர்ஜேடி தலைவர்கள் ஐதராபாத்தில் சந்திரசேகர் ராவை சந்தித்தனர். இந்த நிலையில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோரை விமர்சித்த பாஜக தலைவர் சுஷில் மோடி, அவர்களின் சந்திப்பு இரண்டு பகல் கனவு காண்பவர்களின் சந்திப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு முன்னால் நிற்க முடியாத இரண்டு பகல் கனவு காண்பவர்களின் சந்திப்பு இது என்றும் இந்த சந்திப்பு எதிர்க்கட்சியின் சமீபத்திய நகைச்சுவை நிகழ்ச்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

click me!