தெலங்கானா பாஜகவில் அடுத்த விக்கெட் காலி: வலுக்கும் காங்கிரஸ் கரம்!

By Manikanda Prabu  |  First Published Nov 1, 2023, 1:46 PM IST

தெலங்கானா பாஜக மூத்த தலைவர் விவேகானந்த் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்


மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே  அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையில், மாற்றுக் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, பாஜகவில் இருந்து பலரும் ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், தெலங்கானா பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த் கட்சியில் இருந்து விலகுவதாக அம்மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தெலங்கானா முன்னாள் எம்.எல்.ஏ. கொமட்டிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி, பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் மீண்டும்  காங்கிரஸ் கட்சிக்கு திரும்பவுள்ளார். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் அரசை வீழ்த்துவதே தனது நோக்கம் என்றும், மக்கள் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன் ஒட்டுகேட்பு சர்ச்சை: ஜார்ஜ் சொரொஸ் தொடர்பு பற்றி கேள்வி எழுப்பும் சஞ்சீவ் சன்யால்!

தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி அரசை வீழ்த்த காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் அம்மாநில தேர்தல் கூட்டங்களில் அடுத்தடுத்து கலந்து கொண்டு வருகின்றனர். மேலும், பல்வேறு வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!