வீட்டினுள் வெடித்து சிதறிய இ ஸ்கூட்டர்.. முதியவர் உயிரிழப்பு.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 21, 2022, 12:55 PM ISTUpdated : Apr 21, 2022, 01:14 PM IST
வீட்டினுள் வெடித்து சிதறிய இ ஸ்கூட்டர்.. முதியவர் உயிரிழப்பு.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

சுருக்கம்

வீட்டில் இருந்த நான்கு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டினுள் நிறுத்தி சார்ஜ் ஏற்ற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்து சிதறியதை அடுத்து வீட்டினுள் உறங்கி கொண்டிருந்த 80 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும் வீட்டில் இருந்த நான்கு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் மாவட்டத்தில் தான் எலெக்ட்ர்க் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியது. இதில் வீட்டினுள் இருந்த முதியவர் பி ராமசுவாமி உயிரிழந்தார். வெடித்த சிதறிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உயிரிழந்த ராமசாமியின் மகன் பிரகாஷ் பயன்படுத்தி வந்தார். இவர் கடந்த ஒரு வருடமாக அந்த ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

சார்ஜ் செய்யும் போது வெடித்த பேட்டரி:

பிரகாஷ் தான் பயன்படுத்தி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை கழற்றி நள்ளிரவு 12.30 மணி அளவில் சார்ஜரில் போட்டுள்ளார். இவரது தந்தை ராமசாமி, தாய் கமலம்மா, மகன் கல்யான் ஆகியோர் ஒரே அறையில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலை நான்கு மணி அளவில் பேட்டரி வெடித்து சிதறியது. பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேனி ஆகியோரும் தீ விபத்தில் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். 

காயமுற்ற அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிசாமாபாத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதறும் சம்பவம் முதல் முறையாக அரங்கேறி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதனால் வெடித்து சிதறியது என்பது பற்றி எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

நடவடிக்கை:

வெடித்து சிதறிய இ ஸ்கூட்டர் மாடலை உற்பத்தி செய்த ஸ்டார்ட் அப் நிறுவனம்  மற்றும் டீலர் ஆகியோர் மீது அலட்சியம் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஐ.பி.சி. 304 சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என நிசாமாபாத் துணை கமிஷனர் வெங்கடேஸ்வரலு தெரிவித்தார். 

முன்னதாக பூனே, தமிழ் நாடு மற்றும் நாட்டின் மேலும் சில பகுதிகளில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி வெடித்துச் சிதறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சம்பவங்கள் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க நினைப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?