2 கை இல்லாத இஸ்லாமியர் கல்வீசினாரா? ஜேசிபியால் கடையை இடித்து போலீஸ் அட்டகாசம்..!

Published : Apr 21, 2022, 12:51 PM IST
2 கை இல்லாத இஸ்லாமியர் கல்வீசினாரா? ஜேசிபியால் கடையை இடித்து போலீஸ் அட்டகாசம்..!

சுருக்கம்

மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக ஊர்வலம் சென்றபோது அங்குள்ளவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தின் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. 

மத்திய பிரதேசத்தில் கார்கோன் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் கல் வீச்சு மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இரண்டு கைகள் இல்லாத மற்றும் கால் மெலிந்த வாசிம் ஷேக் என்பவரின் கடையை இடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வன்முறை

மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக ஊர்வலம் சென்றபோது அங்குள்ளவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தின் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் மதக்கலவரமாக மாற, பல வீடுகள் எரிக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

2 கை இல்லாதவர் கல்வீசினாரா?

வன்முறைக்கு அடுத்த நாள் ஏப்ரல் 11-ம் தேதி, மத்திய பிரதேச அரசு கார்கோனில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் மற்றும் கடைகளை புல்டோசர் வைத்து தகர்த்தது. அந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாசிம் ஷேக்கும் ஓரவர். ஆனால், இவருக்கு இரண்டு கைகளும் இல்லை. இவர் கலவரத்தில் கல் எரிந்ததாகக் குற்றம் சாட்டி கடையை இடித்துள்ளனர். 2005ஆம் ஆண்டு மின்சார விபத்து ஒன்றில் தனது இரண்டு கைகளையும் இழந்தவர் வாசிம் ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?