வைஃபை, LED டிவி, சி.சி.டிவி கேமிரா -வந்துவிட்டது அசரவைக்கும் ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரெயில்..!!

First Published May 23, 2017, 11:38 AM IST
Highlights
Tejas Express housefull for first ride from Mumbai bookings full till May 24


வை-பை, எல்.இ.டி. தொலைக்காட்சி,  சூப்பர் சாப்பாடு, பயோ டாய்லட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பையில் இருந்து கோவாவுக்கு  நேற்று இயக்கப்பட்டது. மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

130கி.மீ வேகம்

இந்த தேஜாஸ் ரெயில் பெட்டிகள் அனைத்தும் சென்னை ரெயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள பெட்டிகள் அதிகபட்சமாக 200 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பை-கோவா இடையிலான 578 கி.மீ தொலைவை 8மணிநேரத்தில் கடக்கிறது. 



5 நாட்கள்

மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில்வே நிலையத்தில் இருந்து கோவா மாநிலம் கர்மாலி நகருக்கு நேற்று காலை 5 மணிக்கு இயக்கப்பட்டது. வாரத்தில் 5 நாட்களும், மழைகாலத்தில் 3 நாட்களும் மும்பை-கோவா இடையே இயக்கப்படும். 

20 பெட்டிகள்

இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயிலில் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எக்சிகியூட்டிவ் சொகுசு பிரிவு, சேர்கார் பிரிவு என இருபரிவுகளில் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

டீ,காபி எந்திரங்கள்

முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட இந்த தேஜாஸ் ரெயிலில் பயணிகள் எந்நேரமும் டீ, காபி குடிக்கும் வகையில் எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

வசதிகள்

மேலும் இந்த ரெயிலில் பயோ கழிப்பறைகள், தண்ணீர் இருப்பை காட்டும் அளவுகோல்கள், கைகழுவும் வாஷ்பேஷினில் சென்சார் முறை, கைகளை உலர்த்தும் எந்திரம், பார்வையற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி அறிவிப்பு பலகைகள் வசதிகள் உள்ளன. 



வை-பை வசதி
மேலும், பயணிகளுக்கு ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் எல்.இ.டி. தொலைக்காட்சிகள், இலவச வை-பை வசதிகள், ஒவ்வொரு இருக்கையிலும் செல்போன் சார்ஜர்கள், பணியாளர்களை அழைக்க பொத்தான்கள், நாளிதழ்கள் என வசதிகள் உள்ளன. 

சி.சி.டி.வி கேமிரா

மேலும், சிறப்பான, ருசியான உணவுகள் தயார் செய்யும் சமையல் கலைஞர்கள், பயணிகள்  பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமிராக்கள், தீவிபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை செய்யும் கருவிகள் போன்றவை உள்ளன. 


கட்டணம்

இந்த ரெயிலில் மும்பையில் இருந்து சாப்பாடு வசதிகளுடன் கோவா செல்ல இருக்கை வசதிக்கு ரூ.1280 டிக்கெட் கட்டணமாகும். எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு ரூ.2,680 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

click me!