
நிர்வாண யோகா புகழ் ஓம் சுவாமியை அடித்துத் துவைத்த பொது மக்கள்… விக்கை கையில் பிடித்தபடி தலைதெறிக்க தப்பி ஓட்டம்..
டில்லியில் நடிகைக்கு நிர்வாண நிலையில், யோகா கற்றுக் கொடுத்த பிரபல சாமியார் ஓம் சுவாமிக்கு விழா ஒன்றில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து விரட்டி அடித்தனர்.
டெல்லி ஓம் சுவாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அண்மையில் நடிகை ஒருவரை டாப்லெஸ் ஆக அருகில் அமரவைத்து யோகா கற்றுக் கொடுத்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அதே நேரத்தில், அவருக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் டில்லி விகாஷ் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க ஓம்சுவாமி வந்தார். அப்போது சுற்றி வளைத்த பொது மக்கள் சாமியாரை சரமாரியாக அடித்துத் துவைத்தனர். அடி தாங்காமல் தவித்த ஓம் சாமியாரின் விக் அப்போது கழன்று விழ, அதை கையில் பிடித்தபடி ஓம் சுவாமி தலைதெறிக்க தப்பி ஓடினார்.
இது குறித்த நடைபெற்ற விசாரணையில் ஓம் சுவாமி, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்ததால் ஆந்திரமடைந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகை ஒருவருக்கு நிர்வாண நிலையில் யோகா கற்றுத்தந்ததாக எழுந்த புகாரில் அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஓம்சுவாமி அடி வாங்கி தலையில் வைத்திருந்த விக் கழன்று விழ அதை கையில் பிடித்தபடி தலை தெறிக்க ஓடிய வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.