யாருக்கு எவ்வளவு TAX…??? – இதை படிங்க…!!

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 01:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
யாருக்கு எவ்வளவு TAX…??? – இதை படிங்க…!!

சுருக்கம்

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும், வங்கிகளுக்கு ஒரு நாள், ஏடிஎம் மையங்களுக்கு 2 நாள் விடுப்பு அளிப்பதாக அவர் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, பொதுமக்கள் சிலர் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை உடனடியாக மாற்ற கடைகளுக்கு படை எடுத்தனர். ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் சில்லறை இருந்ததால், கடைகளில் மாற்ற முடிந்தது. சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனால், போதிய அளவுக்கு அந்த பணத்தை மாற்ற முடியவில்லை. நேரமும் போதவில்லை.

அதே நேரத்தில் அதிகளவு பணம் வைத்து இருந்த பெருங்குடி மக்கள், நள்ளிரவில் நகைக்கடைக்கு சென்று, தங்களுக்கு வேண்டிய டிசைன்களில் நகைகளை வாங்கி கொண்டனர்.

இதைதொடர்ந்து, நேற்று அனைத்து வங்கிகளும் திறக்கப்பட்டன. இதனால், அதிகாலை முதல் அனைத்து வங்கிகளின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் பணத்தை கொடுத்து, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி சென்றனர். இதனால், அனைத்து வங்கிகளிலும் பரபரப்பும், பதற்றமுமாக இருந்தது.

இந்நிலையில், தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு.

ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை - வரி கிடையாது

ரூ.5 லட்சம்                                              - ரூ.75 ஆயிரம்

ரூ.10 லட்சம்                                           - ரூ.3.75 லட்சம்

ரூ.20 லட்சம்                                           - ரூ.12.75 லட்சம்

ரூ.30 லட்சம்                                           - ரூ.21.75 லட்சம்

ரூ.40 லட்சம்                                           - ரூ.30.75 லட்சம்

ரூ.50 லட்சம்                                           - ரூ.39.75 லட்சம்

ரூ.100 லட்சம் (1 கோடி)                         - ரூ.84.75 லட்சம்

PREV
click me!

Recommended Stories

Scholarship : மாணவர்களுக்கு ₹12,000 தரும் மத்திய அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
8th Pay Commission: OROP வருமா? அரசு ஊழியர்களின் பென்ஷன் பாகுபாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?