முதலிடத்தில் தமிழகம்...! கைதான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள்- திக் திக் அறிக்கை ..!

By ezhil mozhiFirst Published Oct 29, 2019, 1:39 PM IST
Highlights

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் குறிப்பிட்ட நபர்களை வெளிநாட்டில் இருந்தபடியே பல தீவிரவாத அமைப்புகள் வழிநடத்தி வந்துள்ளனர் 
 

முதலிடத்தில் தமிழகம்...!  கைதான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள்- திக் திக் அறிக்கை ..! 

2014 ஆம் ஆண்டு முதல் இந்த 5 ஆண்டுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக  செயல்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி  தகவலை தேசிய புலனாய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் குறிப்பிட்ட நபர்களை வெளிநாட்டில் இருந்தபடியே பல தீவிரவாத அமைப்புகள் வழிநடத்தி வந்துள்ளனர் 

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் இருந்து 127 ஐஎஸ் ஆதரவாளர்களை கைது செய்துள்ளதாகவும், அதில் 33 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளது. என்ஐஏ பதிவு செய்த 28 வழக்குகளில் 127 ஐஎஸ் ஆதரவாளர்கள் விசாரணையின் போது கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது உத்திர பிரதேச மாநிலம். இந்த மாநிலத்தில் மட்டும் 19 பேர் கைது செய்யப்பட்டு  உள்ளனர். அதற்கு அடுத்த படியாக கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 14 பேரும்,மஹாராஷ்டிராவில் 12 பெரும், கர்நாடகாவில் 8 பேரும் . டெல்லியில் 7 பேரும் உத்திரகாண்ட் மற்றும் வெஸ்ட் பெங்காலில் இருந்து 4 பேரும், ஜம்மு காஸ்மீரில் இருந்து 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் 

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து தலா இரண்டு பேரையும், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தலா ஒருவரையும் என்ஐஏ கைது செய்தது.

பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம், 2014 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஐ.எஸ் இருப்பதைப் பற்றிய தகவல்களை கண்டறிந்து அதே ஆண்டில் நவம்பர் 28 ஆம் தேதி, 'ஜிகாதி' பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அரீப் எஜாஸ், சஹீம், ஃபஹத் மற்றும் அமன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய செய்து சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 20 மற்றும் 27 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த இயக்கத்தின் தலைவர் புபக்கர் அல்-பாக்தாதியின் செல்வாக்கின் காரணமாக பயங்கரவாதக் குழுவின் சித்தாந்தத்தை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் சேரவும், இந்தியாவில் சில அமைப்புடன் கூட்டணி வைத்து  பயங்கரவாத செயல்களைச் செய்யவும் ஆசிய சக்திகளுக்கு எதிரான  'போரில்' பங்கேற்க இளைஞர்கள் 2014 மே 25 அன்று ஈராக்கிற்கு புறப்பட்டனர்.

ஐ.எஸ் ஆதரவாளர்களை கண்டறிந்து மூளை சலவை செய்து  தீவிரமயமாக்கல், பயிற்சி, ஆட்சேர்ப்பு, திட்டமிடல் போன்ற பயங்கரவாத தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் அவர்களை துல்லியமாக இயக்கி  வந்துள்ளதை உறுதி செய்து உள்ளது தேசிய புலனாய்வு அமைப்பு.  கைது செய்யப்பட்ட 127 ஆதரவாளர்களும் இஸ்லாமிய போதகர்களின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டவர்கள் 

இதனை தொடர்ந்து தீவிரவாத செயலுக்கு உடந்தையாக இருந்த மும்பையைச் சேர்ந்த நாயக் மீது எழுந்த குற்றசாட்டை அடுத்து மலேசியாவில் தஞ்சம் புகுந்தார்.ஜூலை 2016 இல் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது நாயக் மூளையாக  செயல்பட்டத்தை, இந்த தாக்குதலில் ஈடுபட்ட  நபர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தமிழகம் மற்றும் கேரளா தொடர்பான மூன்று ஐ.எஸ் வழக்குகளிலும், ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஸ்ரீலங்காவில் நிகழ்த்திய குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டவர் ஜஹ்ரான் ஹசீமின் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபின்னர் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் அடங்கிய ஐஎஸ் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்துபயங்கரவாதக் கும்பலை உருவாக்கி, சில இந்து தலைவர்களைக் கொல்ல ஒரு கிரிமினல் சதித்திட்டத்தில் இறங்கியதைக் கண்டறிந்ததை அடுத்து என்.ஐ.ஏ, 2018 அக்டோபர் 30 அன்று தமிழகத்தில் வழக்கு பதிவு செய்தது. 

இது தொடர்பாக இந்த ஆண்டு மே 30 அன்று கோயம்புத்தூரில் வசிக்கும் முஹம்மது அஸ்ஹாருதீன் என்ற நபர் மீது ஒரு புதிய வழக்கை பதிவு செயப்பட்டது. ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் நபர்களை கண்டறிந்து, மூளை  சலவை செய்து அவர்களுக்கு  தேவியான பயிற்சியை கொடுப்பது, முக்கிய  இந்து தலைவர்களை கொள்ள முயற்சி செய்வது குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பல காரணங்களை கண்டறிந்து பயங்கரவாதியிடம் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

click me!