அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ.பாப்டே... குடியரசு தலைவர் ஒப்புதல்..!

By vinoth kumarFirst Published Oct 29, 2019, 11:56 AM IST
Highlights

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் செய்த பரிந்துரையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் செய்த பரிந்துரையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார்.  

தற்போதுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-த் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதியோடு நிறைவடைகிறது. தற்போது, நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அதன் தீர்ப்பை வழங்கிவிட்டு ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமிக்க வேண்டும் என, ரஞ்சன் கோகோய் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரை மீது மத்திய சட்ட அமைச்சகம் முடிவெடுத்து, அதை பிரதமா் மோடிக்கு அனுப்பிவைத்தது. அவர் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நியமிக்கப்படுவதற்கான ஆணையை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே, நவம்பா் 18-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவிக்காலம், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி வரை முடிவடைகிறது.

click me!