தமிழ்நாட்டிற்கு மட்டும் இவ்வளவா?... தட்டுபாடு என சொன்னவுடனேயே தட்டாமல் அள்ளிக் கொடுத்த மத்திய அரசு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 29, 2021, 7:27 PM IST
Highlights

தமிழ்நாட்டிற்கு 6476 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் ரயில்வே துறை பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் கடும் சீரமம் ஏற்பட்டது, மேலும் அவர்களின் உயிர் காக்க ஆக்ஸிஜன் அத்தியாவசியமானதாக இருந்தது. ஆனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலவிய ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மத்திய அரசு ரயில்கள் மூலமாக நாடு முழுவதும் திரவ ஆக்ஸிஜனை கொண்டு சேர்த்து வருகிறது. இதுவரை 1,976 டேங்கர்களில் சுமார் 34,760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

474 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தென் மாநிலங்களுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அதிகளவில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 6476 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு முறையே 3,700, 4,800 மற்றும் 4,700 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்ஸிஜன் பெற்றுள்ளன.

 இதுவரை தமிழகத்திற்கு 6476 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5791 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 4697 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 4824 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 3791 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 560 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 

click me!