சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக சிறுமி உயிரிழப்பு... தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம்

Published : Dec 10, 2023, 11:29 PM IST
சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக சிறுமி உயிரிழப்பு... தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம்

சுருக்கம்

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த நிலையில் தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாள் முதலே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில்தான் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரே திணறி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி போன்று வளாகங்களில் பக்தர்களை தேக்கி வைத்து அனுப்பும் முறையை தேவசம்போர்டு கையில் எடுத்துள்ளது.

இதற்காக பக்தர்கள் மரக்கூட்டம் முதல் சரங்குத்தி பகுதிகளில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மண்டப நடைப்பந்தலில் இருந்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சேலம், பாப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவரின் 10 வயது மகள் பத்மஸ்ரீ சபரிமலை கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது, அப்பாச்சிமேடு பகுதியில் பத்மஸ்ரீ திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். பத்மஸ்ரீக்கு ஏற்கெனவே இதயம் சம்பந்தமான பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதே சமயம் கூட்ட நெரிசல் காரணமாக அவர் இறந்தாரா? என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி பத்மா ஶ்ரீ நேற்று மரணம் அடைந்தது பெரும் துயரை ஏற்படுத்தியது. இதனால் முதியவர்கள், குழந்தைகளுக்கு தனி வரிசை உருவாக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் இந்த வரிசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தேவசம் போர்டு நிர்வாகம் செய்வதறியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் பக்தர்களின் தரிசன நேரத்தையும் தற்போது நீட்டித்துள்ளனர். இரவு 11 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம். அதிகாலையில் 3 மணி முதலே பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

குறைந்த விலையில் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!