ஏ.டி.எம். சேவை சீராக 10 நாட்களாகுமாம்

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 10:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
ஏ.டி.எம். சேவை சீராக 10 நாட்களாகுமாம்

சுருக்கம்

மும்பை, நவ. 11-

நாட்டில் உள்ள ஏ.டி.எம். சேவை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 10 நாட்கள் வரை ஆகும். அதிகமான ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன, ஆனால், அதற்கான பணம் நிரப்பும் நிறுவனங்கள் சில தான் இருக்கின்றன என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா நேற்று தெரிவித்தார்.

நாட்டில் கருப்பு பணத்தையும், போலி ரூபாய் நோட்டுக்களையும் ஒழிக்கும் நோக்கில், புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என  பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார்.

இதையடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000, ரூ.100, நோட்டுக்கள் நேற்று முதல், வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.1000,ரூ.500 நோட்டுக்களை முறையான அடையாள அட்டையை காண்பித்து, இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுச் சென்று வருகின்றனர். ஆனால், நாடுமுழுவதும் அனைத்து வங்கிகள், தபால்நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த சூழலில் இன்று முதல் ஏ.டி.எம். மையங்களில் இருந்து மக்கள் பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்களில் மக்கள் கூட்டம் படிப்படியாக குறையும் என நம்பப்படுகிறது. ஆனால், ஏ.டி.எம். சேவை சீராக சில நாட்களாகும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
தற்போதுள்ள நாட்டில் 2 லட்சம் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவற்றில் பணத்தை நிரப்பும் நிறுவனங்கள் 3 முதல் 4 மட்டுமே இருக்கின்றன.

அதிலும், தற்போதுள்ள ஏ.டி.எம்.களில் பெரும்பாலானவை ரூ. 1000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. 100 ரூபாய் வழங்கும் ஏ.டி.எம். மையங்கள் கூட குறைவுதான். அதேசமயம், 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்குவதற்கும் எந்தவிதமான புரோகிராமும், மாற்றங்களும் செய்யவில்லை. ஆதலால், ஏ.டி.எம். மையத்தில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் 10 நாட்கள் ஆகலாம்.

நாட்டின் கடைகோடி, எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணத்தை கொண்டு செல்வதிலும் கடும் சவால் நிலவுகிறது. அங்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதியும், பாதுகாப்பு வசதியும் செய்வது அவசியமாகிறது.

பருவநிலையை கருத்தில் கொண்டு, பல மாநிலங்களில் பணம் விமானம், ஹெலிகாப்டர் மூலம் கொண்ட செல்லப்பட்டது. ஆனால், எல்லைப்பகுதி கிராமங்களில் கொண்டு செல்வதில்  பல சிக்கல்கள் இருக்கின்றன  எனத் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

நோ டென்ஷன்! பயம் வேண்டாம்! வீட்டு சிலிண்டர் விநியோகத்தில் கவலை இனி இல்லை! மத்திய மாநில அரசுகளின் 'மாஸ்' அப்டேட்!
மீண்டும் ஒரு "லாக்டவுன்"! சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்கள்.! உலகையே பதற வைக்கும் அமெரிக்கா