சனி,ஞாயிறுகளில் வங்கிகளில் மக்களுக்கு கூடுதலாக இரு சேவைகள் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 09:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சனி,ஞாயிறுகளில் வங்கிகளில் மக்களுக்கு கூடுதலாக இரு சேவைகள் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

சுருக்கம்

செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை மாற்றும் சேவைகள் மட்டுமே சனி, ஞாயிறுக்கிழமைகளில் இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், கூடுதலாக இருசேவைகளும் மக்களுக்கு கிடைக்கும் என ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து  ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது

மத்திய அரசு ரூ.1000, மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தபின், அதை மாற்றி, புதிய ரூ500, ரூ.2000 நோட்டுகளாக மக்கள் பெற்றுக்கொள்ள சனி, ஞாயிறுக்கிழமைகளில் வங்கி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த நாட்களில் ரூபாய் நோட்டுக்களை மாற்றுதல், பணம் டெபாசிட் ஆகிய சேவைகள் மட்டுமே செய்யபடும் என்ற நிலையில், கூடுதலாக, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நெப்ட்(என்.இ.எப்.டி.) சேவை, காசோலை பரிமாற்றம், செக் கிளியரிங் சேவையும் செய்யப்படும். அனைத்து விதமான வங்கிச் சேவையும் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!