தாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த 5 வயது சிறுமி…!!!

 
Published : Jun 29, 2017, 10:51 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
தாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த 5 வயது சிறுமி…!!!

சுருக்கம்

Take action against the murderers of the mother - 5 year old girl who bribed the money laundering

தாயின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறி 5 வயது சிறுமி தனது உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் மான்சி என்ற 5 வயது சிறுமியின் தாயார் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.

அதற்கு காரணம் அவரின் கணவரும், அவரது வீட்டாரும் வரதட்சனை கேட்டு மிரட்டி கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய பணம் லஞ்சமாக தர வேண்டும் என போலீஸ்காரர்கள் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், சிறுமி மாசினி தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த சில்லரைகளை எடுத்து கொண்டு சென்று இந்த உண்டியல் பணத்தை வைத்து கொண்டு தனது தாயின் தற்கொலை குறித்து விசாரணை செய்யுங்கள் எனஉத்தரப்பிரதேச மாநிலம் மீரட் சரக ஐ.ஜி ராம்குமாரிடம் முறையிட்டார்.

இதுகுறித்த புகைப்படம் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!