ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாவுதீன் சர்வதேச குற்றவாளி…அமெரிக்கா அதிரடி அறிவிப்பு…

 
Published : Jun 27, 2017, 04:45 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாவுதீன் சர்வதேச குற்றவாளி…அமெரிக்கா அதிரடி அறிவிப்பு…

சுருக்கம்

syed salavudeen international criminal....america announced

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர்  சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.

காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து,வந்ததோடு மட்டுமல்லாமல்  அதற்கு பின்புலமாக இருந்து வந்தவன்  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தலைவன் சையத் சலாவுதீன்.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு இந்தியாவில் பல்வேறு நாசவேலையில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன் தலைவன்  சலாவுதீன் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறான்.

இந்த சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.

இந்நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவரான சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள மோடி அதிபர் டிரம்பை சந்தித்து பேசி வரும்  நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்கு  இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்த முடிவின் விளைவாக, அமெரிக்க குடிமக்கள் சலாவுதீனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அமெரிக்காவின் அதிகார எல்லைக்கு உட்பட்ட சாலாவுதீனின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!