
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனசங்க தலைவர் பண்டிட் தீனதயாளு உபாத் யாயாவின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாக்களில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பங்கேற்று வருகிறார்.
அதன்படி இன்று புதுச்சேரியிலும் நூற்றாண்டு விழா கொண்டாடபட்ட்து. இதில் கலந்து கொண்ட அமித்ஷா பின்னர் நடைபெற்ற தொழில் வல்லுனர்கள் கூட்ட்த்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்தியில் செயல்பட்டு வரும் 3 ஆண்டு கால பாஜக அரசின் பெருமைகளை பட்டியலிட்டார்.
நாட்டில் தொழில் வளத்தை, உற்பத்தியை பெருக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கிராமங்களில் 5 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
5 கோடி ஏழை தாய்மார்களின் விறகு புகை பிரச்சனையில் இருந்து விடுவிப்பு அளிக்கபட்டுள்ளதாகவும், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாத நாடு என்ற நிலையை எட்ட மத்திய அரசு பாடுபடுவதாகவும், குறிப்பிட்டார்.
4.5 கோடி வீடுகளில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், பெண்கள், சிறுமிகள் நலனை முன்வைத்தே கிராமங்களில் கழிப்பறை கட்டும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுப்பதாகவும் கூறினார்.
7.64 கோடி பேருக்கு உத்தரவாதமின்றி தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் எனது வாழ்நாளில் இதுபோன்ற ஊழல் அரசை தான் பார்த்ததில்லை எனவும், மத்தியில் 2014 க்கு முன் அமைச்சர்களே பிரதமர் போன்று செயல்பட்ட்தாகவும், குறிப்பிட்ட அமித்ஷா பிரதமரை மத்திய அமைச்சர்கள் மதிக்காததால் தான் செயல்படாத அரசாகவே இருந்தது என பேசினார்.