‘நீங்களும் என்னுடைய மகள்களைப் போன்றவர்களே’ – பாகிஸ்தான் பெண்களுக்கு ‘சுஷ்மா’ ட்வீட்

Asianet News Tamil  
Published : Oct 06, 2016, 07:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
‘நீங்களும் என்னுடைய மகள்களைப் போன்றவர்களே’ – பாகிஸ்தான் பெண்களுக்கு ‘சுஷ்மா’ ட்வீட்

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த மாதம் 18-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2௦ இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் 7 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக இளைஞர்கள் அமைதி திருவிழாவில், பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பெண்கள் கொண்ட  கலந்துகொண்டனர்.

திருவிழா முடிந்து 19 பேரும் தங்கள் நாடான பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக திரும்பினர்.

இதையடுத்து, அந்த பாக்.பெண்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு டிவிட்டரில் மூலம் நன்றி தெரிவித்துள்ளனர்.

அந்த டிவிட்டர் பதிவில், பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப உதவிய சுஷ்மாவுக்கு மில்லியன் தடவை நன்றிகள் என்றும்,  ‘‘இந்திய பண்பாட்டு விருந்தினர்கள் கடவுளைப் போன்றவர்கள்’’ என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தனது பதில் டிவிட்டரில்,

நான் உங்களின் நலன் குறித்து அக்கறையுடனே இருந்தேன். ஏனென்றால் நீங்களும் என்னுடைய மகள்களைப் போன்றவர்களே  என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் பயணம்!
உலகின் பழமையான மொழி.. இந்தியாவில் அனைவரையும் ஈர்க்கும் தமிழ்.. பிரதமர் மோடி பெருமிதம்!