ரூ.5.75 கோடி ரயில் கொள்ளை துப்பு துலங்குகிறது - மும்பை கொள்ளையரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Asianet News Tamil  
Published : Oct 06, 2016, 07:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
ரூ.5.75 கோடி ரயில் கொள்ளை துப்பு துலங்குகிறது - மும்பை கொள்ளையரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சுருக்கம்

ரூ.5.75 கோடி ரிசர்வ வங்கிப்பணம் ரயில் கொள்ளை விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் மும்பையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம்  தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்காக கொண்டு வரப்பட்ட ரூ.242 கோடி ரிசர்வ் வங்கிப்பணத்தில் ரூ. 5 கோடியே 75 லட்சம் ரூபாய் பழைய நோட்டுக் கட்டுக்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சியிலிருந்து வந்த பாதுகாப்பு அதிகாரி ராஜ்மோகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விருத்தசலத்திலிருந்து – சேலம் மார்கத்திலும், ஈரோட்டிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 வழக்கு ரயில்வே பாதுகாப்பு படையிடமிருந்து தமிழக ரயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டு பின்னார் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. கடந்த 56  நாட்களாக வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. 

 கொள்ளையர்கள் வெகு சாமர்த்தியமாக திட்டம் போட்டு கொள்ளை அடித்ததால் கொள்ளை எங்கு நடந்தது என்ற முடிவுக்கே இதுவரை சிபிசிஐடி போலீசாரால் வர இயலவில்லை. கொள்ளையர்கள் கைரேகை கூட கிடைக்காத அளவுக்கு சாமர்த்தியமாக கொள்ளை அடித்ததால் விசாரணையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றன்றனர்.

இந்நிலையில் விசாரணையின் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் ரயில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் , பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சற்று முன்னேற்றம் தரும் வகையில்  மும்பையைச் சேர்ந்த சில கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடந்துவருகிறது. இது தவிர கேரளா, மேற்குவங்கம், மும்பையிலும் போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இனி பெரிய ராக்கெட்டுகளை ஈஸியா ஏவலாம்.. ஸ்ரீஹரிகோட்டாவில் ரெடியாகும் இஸ்ரோவின் 3வது ஏவுதளம்!
வரலாறு படைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் பயணம்!