
கர்நாடகாவில் தென்னை தோப்பு ஒன்றில் இருந்து தேங்காய் திருட முயன்ற சிறுவன் ஒருவனை எறும்பு புற்றில் நிற்க வைத்து தண்டித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் கொடுமைப்படுத்தப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹாரண்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் தோப்பு ஒன்று உள்ளது. அந்த தோப்பில் இருந்து சிறுவன் ஒருவன், சில தேங்காய்களை எடுத்துச் சென்றுள்ளான்.
அப்போது அங்கு வந்த தோப்பின் உரிமையாளர், சிறுவனைப் பிடித்து தண்டித்துள்ளார். தன்னுடன் வந்தவர்கள் சிறுவனை கழியால் பலமாக அடித்துள்ளார். மேலும், சிறுவனை, அங்குள்ள எறும்பு புற்றில் நிற்க வைத்தும் சித்தரவதைபடுத்தப்பட்டுள்ளான். சிறுவன், மன்னிப்பு கேட்டும் இரக்கமே இல்லாமல் அவனை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
சிறுவனை எறும்பு புற்றில் நிற்க வைத்து சித்தரவதைப்படுத்தும் காட்சியி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, சிறுவன் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து பேசிய சமக ஆர்வலர்கள், சிறுவனை தாக்கியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, ஹாசன் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.