
உத்தரப்பிரதேசம் அருகே பிரதமர் மோடியே ராமராக சித்தரித்து போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பரபரப்பாக பேசக்கூடிய வகையில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடியை ராமராக சித்தரித்தும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை ராவணனாக சித்தரித்தும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ராவணின் மகனான மேகநாதனாக சித்தரித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ’சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை பாராட்டும் வகையில் மேற்கண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்திய ராணுவம் கூறுவது போல சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் கூறி வருவதால், பாகிஸ்தானின் பிரசாரத்தை பொய்யாக்கும் வகையில் வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து இருந்தார்.
எனவே, ராமாயண புராணத்தின்படி ராவணணின் மகனான மேகநாதனுடன் கெஜ்ரிவாலை ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த போஸ்டர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.