
டுவிட்டரில் கிண்டல் செய்த இளைஞருக்கு கண்ணியமாகவும், அதேசமயம், கலாய்க்கும் விதமாகவும் பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “ தம்பி, நீங்க செவ்வாய் கிரகத்தில் சிக்கினாலும், இந்தியத் தூதரகம் உதவும்” எனத் தெரிவித்தார்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட், விசா குறித்த புகார்களை டுவிட்டரில் தெரிவித்தவுடன் அவர்களுக்கு விரைவாக உதவி செய்து தாய்நாடு திரும்ப மத்திய அமைச்சர் சஷ்மா உதவி வருகிறார்.
மத்திய அமைச்சர்களிலேயே மிகவும் சுறுப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சுஷ்மா செயலாற்றி வருகிறார். டபவிட்டரில் சஷ்மா சுவராஜை கிண்டல் செய்யம் வகையில் இளைஞர் ஒருவர் நேற்று டுவிட் செய்து இருந்தார்.
கரண் சைன் என்பவர் அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு செய்த டுவிட்டில் “ அமைச்சர் சுஷ்மா நான் செவ்வாய்கிரகத்தில் சிக்கி இருக்கிறேன். 987 நாட்களுக்கு முன் எனக்கு மங்கல்யான் விண்கலத்தில் எனக்கு கொடுத்து அனுப்பிய உணவு தீர்ந்துவிட்டது. எப்போது மங்கல்யான்-2 அனுப்புவீர்கள்” என்று கிண்டல் செய்து இருந்தார்.
அதில் பதில் அளித்த சுஷ்மா, “ தம்பி கவலைப்படாதீர்கள்… செவ்வாய் கிரகத்தில் இருக்கும் இந்தியத் தூதரகம் உங்களுக்கு உதவும்” என்று கண்ணியமாகவும், அதேசமயம், தன்னை கலாய்த்த இளைஞரை பதிலுக்கு கலாய்த்துவிட்டார்.
சஷ்மாவின் இந்த டுவிட், அனைவராலும்பாராட்டப்பட்டு, அவரின் புத்திசாலித்தனமாக பதிலை அனைவரும் புகழந்தனர். அதேசமயம், இதுபோன்ற குறும்புத்தனமாக பதிலை பொறுப்பான அமைச்சர்களுக்கு அனுப்புவதை அந்த இளைஞர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என சுஷ்மா ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.