பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை - உச்சநீதிமன்றம் இடைக்கால தடை...!!!

First Published Jun 9, 2017, 2:45 PM IST
Highlights
supreme courts temporary ban for aadhaar pan card linking


பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்பது கட்டாயாமாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது.

இதை தொடர்ந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.

இதே போல் பான் கார்டு வாங்க ஆதார் அட்டை அவசியம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்திய குடிமகன்கள் யாரையும் ஆதார் எண்ணை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுவது ஆதார் சட்ட நடைமுறைக்கு முரணானது எனவும், ஒழுங்காக வரி செலுத்துபவர்களிடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக்க நிர்ப்பந்தம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் அவசியம் இல்லை என வருமான வரி சட்டம் 139 ஏ வை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

click me!