Supreme Court: நிக்கா ஹலாலா, பலதார மணம் குறித்து விசாரிக்க தனி அரசியல்சாசன அமர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

By Pothy Raj  |  First Published Jan 21, 2023, 11:44 AM IST

முஸ்லிம்கள் சமூகத்தில் ஒரு சாரர் கடைபிடிக்கும் நிக்கா ஹலாலா மற்றும் பலதார மணம் குறித்து விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட தனி அரசியல்சாசன அமர்வு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


முஸ்லிம்கள் சமூகத்தில் ஒரு சாரர் கடைபிடிக்கும் நிக்கா ஹலாலா மற்றும் பலதார மணம் குறித்து விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட தனி அரசியல்சாசன அமர்வு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாஜக நிர்வாகியும், மூத்த வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாயே, முஸ்லிம் சமூகத்தில் கடைபிடிக்கப்டும் நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகியவற்றை செல்லாது என அறிவிக்கக் கோரி பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

Tap to resize

Latest Videos

கொசுறு! 30 லட்சம் காலியாக இருக்கு! 71,000 பேருக்குத்தான் வேலையா: காங்கிரஸ் விளாசல்

முஸ்லிம்கள் வழக்கத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்ளும் பாலிகாமி முறை நடைமுறையில் இருக்கிறது. அதேபோல கணவரிடம் இருந்து விவாகரித்து பெற்ற முஸ்லிம் பெண் மீண்டும் கணவரை திருமணம் செய்ய விரும்பினால், வேறுஒருவரை திருமணம் செய்து விவாகரித்து அளித்தபின்புதான் கணவரை மீண்டும் திருமணம் செய்யும் நிக்காஹலாலாவும் வழக்கில் இருக்கிறது. இதை எதிர்த்துதான் அஷ்வினி உபாத்தாயா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஹேமந்த் குப்தா, சூர்ய காந்த், எம்எம் சுந்தரேஷ், சுதான்ஷு துலியா தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரிக்கப்பட்டது. அப்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய சிறுபான்மை ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் நீதிபதி பானர்ஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதும், நீதிபதி ஹேமந்த் குப்தா கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் ஓய்வு பெற்றனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

8 வயது சிறுமி.. வெறிப்பிடித்த பாஜக எம்.எல்.ஏ! கொடூர சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

இந்நிலையில் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ பலதார மணம், நிக்கா ஹலாலா சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வில் 2 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஆதலால், புதிதாக அமர்வு உருவாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவி்த்திருந்தார்

இந்த மனு தலைமை நீதிபதி டிஒய் சந்திசூட், நீதிபதி பிஎஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில் “  முக்கியமான வழக்குகள், 5 நீதிபதிகள் அமர்வு முன் இருக்கின்றன. ஒவ்வொரு வழக்காக விசாரித்து முடிக்கிறோம். இந்த வழக்கையும் விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட புதிய அரசியல்சாசன அமர்வு உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
 

click me!