இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது... உறுதி அளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!!

By Narendran S  |  First Published Jan 20, 2023, 11:41 PM IST

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 


பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நிலைமையை சமாளிக்க இலங்கை சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் கடன் பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால் சர்வதேச நிதியம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிடம் உத்தரவாதம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Nexon EV-யின் விலையை குறைத்தது டாடா நிறுவனம்... மைலேஜும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. 

இதையும் படிங்க: கடையில் நூடுல்ஸ் சாப்பிட போறீங்களா? இதை கொஞ்சம் பாருங்க.! சர்ச்சை கிளப்பிய வைரல் வீடியோ

இதனிடையே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். உட்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில், சுகாதாரம் முதலான துறைகளில் முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 

நம்பகமான ஓர் அயல்நாடாகவும் பங்காளியாகவும் உள்ள இந்தியா, தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்காக எந்தவொரு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது.

தேவையான இந்நேரத்தில் நாம் இலங்கையுடன் துணைநிற்பதன் மூலம், இலங்கை எதிர்கொள்ளும் சகல சவால்களையும் வெற்றிகொள்ளமுடியுமென நம்புகின்றோம்.

— Dr. S. Jaishankar (@DrSJaishankar)
click me!