ஹர்திக் படேல் கனவில் மண்ணை வாரி போட்ட நீதிமன்றம்... சொந்த மாநிலத்தில் மோடி செம ஹேப்பி..!

By vinoth kumarFirst Published Apr 2, 2019, 12:40 PM IST
Highlights

கலவர வழக்கில் தண்டனை பெற்ற ஹர்திக் படேல் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல்  ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

கலவர வழக்கில் தண்டனை பெற்ற ஹர்திக் படேல் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல்  ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி, கடந்த 2015ம் ஆண்டு பெரும் போராட்டம் நடந்தது. அப்போது விஸ்நகரில் நடந்த போராட்டம் தொடர்பாக ஹர்திக் படேல் உட்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிவில் ஹர்திக் படேல்  குற்றவாளி என அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அவரது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய நீதிபதி, தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

 

இந்நிலையில், கடந்த 12ம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல், மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதால், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மார்ச் 29-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் ஹர்திக் படேல் போட்டியிடாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அவர் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

click me!